ஸ்ரீ வள்ளி தேவசேனாதிபதியாகிய ஸ்ரீ சுப்பிரமணியர்

ஸ்ரீ வள்ளி தேவசேனாதிபதியாகிய ஸ்ரீ சுப்பிரமணியர்

பசுமலை ஒரு குறிப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா மேல் ஒலக்கூர் அருகில் உள்ள பசுமலை, ஸ்ரீ வள்ளி தேவசேனாதிபதியாகிய ஸ்ரீ சுப்பிரமணியர் ஸ்தலம். பசுமை நிறைந்த மலைமேல் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் இருந்து அருணகிரியார் முருகன் அருள் பெற்று முதன்முதல் இம்மலைக்கு வந்து இந்த மலையின் பசுமை காட்சியைக் கண்டு இங்கு ஒரு சக்தி வேலை பிரதிஷ்டை செய்து இம்மலைக்கு கோகிரி என பெயரிட்டார். இந்த மலையைப் பற்றிய குறிப்பு அவர் அருளிய திருப்புகழ் பாடல் தொகுப்பில் 1058 வது பாடலாக வருகிறது.





இந்த மலைக்கு அருகில் அமைந்துள்ள மேல் ஒலக்கூர் கிராமத்தில் அந்தணர் மரபில் மிகவும் வசதியாக வாழ்ந்து வந்த ஜமீன்தார் பரம்பரையில் வந்த சுப்பிரமணிய சோமயாஜுலு என்பவர் மலை மேல் கோவிலை நிர்மாணம் செய்து பூஜைகள் செய்து வந்தார். இவர் பரம்பரை பல யாகங்கள் செய்ததின் காரணமாக சோமயாஜுலு என்ற பட்டம் பெற்றார்கள். அதன்பிறகு அவர்கள் சந்ததியினர் இந்த பட்ட பெயருடன் மேற்படி கோவிலை பராமரித்து வருகிறார்கள். அவர்கள் பெற்று வந்த ஜமீனை அரசு நீக்கிவிட்டதால் மேற்கொண்டு விவசாயம் செய்து கோவிலை நிர்வகித்து வந்தனர். கோவிலுக்கு எந்தவிதமான அசையும், அசையா சொத்துக்கள் இல்லை. தற்பொழுது சுப்பிரமணிய சோமயாஜுலு, நடராஜ சோமயாஜுலு மற்றும் ராம்குமார் சோமயாஜுலு என்பவர்கள் தர்மகர்த்தாவாக இருந்து கோவிலை பூஜை செய்து நிர்வகித்து வருகின்றனர்.



இம்மலையில் குகை ஒன்று உள்ளது. அதில் சடை சாமியார் என்ற மலையாள முனிவர் இருந்து சில பணிகளை செய்துள்ளார். அதன் பிறகு ஸ்ரீ லலிதானந்த சரஸ்வதி சுவாமிகள் இந்த குகையில் அன்ன ஆகாரம் ஏதும் இல்லாமல், பல சித்து வேலைகள் தெரிந்தும் அதை பிரயோகம் செய்யாமல் இருந்தார். அவர் ஆந்திர மாநிலம் சென்று அங்குள்ள பெரிய கனவான்களை சந்தித்து அவர்பால் அவர்கள் ஈர்க்கப்பட்டு 1948, 49 இல் ரேஷனில் 6 அவுன்ஸ் அரிசி போட்ட காலத்தில் ஆந்திரா தனவாங்களை அழைத்து தரமான அரிசியை கொண்டு வந்து 30, 48, 60 என்ற நாள் கணக்கில் சண்டி யாகம், ருத்திர யாகம் என செய்து இரண்டு வேளைகளில் 500 நபர்கள் வீதம் உணவு வழங்கப்பட்டது.



1963 ஆம் வருடம் செஞ்சி தாலுக்காவில் இருந்த கலெக்டர், தாசில்தார் சிவராம கிருஷ்ண ஐயர், திரு. கிருபானந்த வாரியார், பித்துக்குளி முருகதாஸ். பொன் பரமகுரு, சாண்டோ சின்னப்பா தேவர், பஸ் முதலாளிகள் காட்டுமன்னார்குடி சின்ன சுப்பிரமணிய பிள்ளை மற்றும் நெற்குணம் N.R. கிருஷ்ணசுவாமி, N.V. அருணாசல சாஸ்த்ரி இவர்களுடன் தர்மகர்த்தா சாமுளு, சோமயாஜுலு மணியம் எல்லாம் சேர்ந்து படிகட்டுகள் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர்



நித்ய பூஜை: கோவில் த்ர்மகர்தாக்களான சுப்பிரமணிய சோமயாஜுலு, நடராஜ சோமயாஜுலு மற்றும் ராம்குமார் சோமயாஜுலு அவர்களே பூஜைகள் இன்றுவரை செய்து வருகின்றனர். எந்த வித வருமானமும் இந்த கோவிலுக்கு கிடையாது. சுவாமியை தரிசிக்க வருபவர்கள் வழங்கும் காணிக்கைதான். அதுவும் கிராமமாக உள்ளதால் அதிகம் வழங்குபவர்கள் கிடையாது.



நித்ய சேவை கமிட்டி: 2003 இல் இந்த கமிட்டி தொடங்கி கீழ் கண்ட கைங்கர்யங்களை செய்து வருகிறார்கள்.



360 படிகளை 410 படிகளாக ஆக்கியது



மலை அடிவாரத்திலிருந்து போர் போட்டு சுமார் ஆயிரம் அடிகளுக்கு மலைமேல் சுவாமி அபிஷேகத்திற்காக தண்ணீர் கொண்டுவர வசதி செய்துள்ளார்கள். இதன் மூலம் மலைமேல் வரும் பக்தர்களும் பயனடைகிறார்கள்.



14.6.2005 வைகாசி 30 ஆம் தேதி 45 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல முறையில் கும்பாபிஷேகம் செய்து முடித்துள்ளார்கள்.



இந்த மலையைச்சுற்றி 1.60 கிலோ மீட்டர் சுற்றளவு கிரிவலப் பாதை அமைத்து ஒவ்வொரு மாத பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் வரும் சுமார் 2000 பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.



திருப்பணி:



இக்கோவிலின் அடிவாரத்தில் 36 பில்லர்கள் கொண்ட திருமண மண்டபம் சுமார் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்ட திட்டம் இடப்பட்டுள்ளது. ஒரு பில்லருக்கான தொகையாக ருபாய் 7,500 ஐக் கொடுத்து எல்லோரும் பங்கு கொள்ளலாம்.



ருபாய் 15 லட்சம் செலவில் அன்னதானக் கூடம் மற்றும் கழிப்பிடம் கட்டும் ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. காலம் காலமாக இந்தக் கோவிலிலும் கீழே உள்ள ஆச்ரமத்திலும் அன்னதானம் தொடர்ந்து நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது.



கிரிவலப்பாதையில் ஜல்லி போட்டு உள்ளது. தார் போட வேண்டும்.



அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவிலை கன்னிமூலையில் மாற்றி பிரதிஷ்டை செய்யவேண்டும்.



இக்கோவிலின் முக்கிய விசேஷ நாட்கள்:



ஜனவரி முதல் தேதி



தை கிருத்திகை



தை பூசம்



சிவராத்திரி



பங்குனி பிரம்மோத்சவம்



பங்குனி உத்திரம் தேர்



தமிழ் வருடப்பிறப்பு 1008 அகல் தீபம் படிகளில் ஏற்றப்படுகிறது.



வைகாசி விசாகம்.



ஆடி கிருத்திகை அன்னதானம்



ஆவணி கிருத்திகை கிருபானந்த வாரியாரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட படிவிழா.



கந்த சஷ்டி 108 சங்காபிஷேகம்.



கார்த்திகை தீபம்.



ஒவ்வொரு மாத கிருத்திகை.



பசுமலைக்கு வருவதற்கான வழி: திண்டிவனத்திலிருந்து செஞ்சி செல்லும் பாதையில் நாடார்மங்கலத்தில் வலதுபுறம் சென்று சுமார் இருபது கிலோ மீட்டார் தொலைவில் உள்ள மேல் ஒலக்கூர் கிராமத்தில் உள்ளது பசுமலை.


காசோலை வழங்குபவர்கள், நித்ய சேவா கமிட்டிபேரில் காசோலை எடுத்து 1, 38 வது தெரு, நங்கநல்லூர், சென்னை 600 061. என்ற முகவரிக்கு அனுப்பவும்,. தொலை பேசியில் தொடர்புகொள்ள 9789083210, 9944758071, 9003114240, 9841722886.

For Contributions:

Nithya Seva Committee

City Union Bank, Ashok Pillar Branch

A/C Number: 212261





No posts.
No posts.